உன்ன முன்னாடியே பாத்திருந்தா, கண்டிப்ப உன்னதான் லவ் பண்ணிருப்பேன் - PS RAGAV
ஹே!!! ஒன்னு சொல்லவா? ம்ம்ம்… சொல்லு “ உன்ன முன்னாடியே பாத்திருந்தா, கண்டிப்ப உன்னதான் லவ் பண்ணிருப்பேன் ”. இந்த வசனத்த நீங்க கேட்டிருக்கீங்களா? இல்ல யார்க்கிட்டையாச்சும் சொல்லிருக்கீங்களா? கண்டிப்பா இந்த வசனத்த கடந்துதான் வந்துருப்பீங்க. ஆமா, டீனேஜ் காலங்கள்ல இந்த காதலுங்குற கடைக்கு போகாம, இருந்திருக்க வாய்ப்பே இல்ல. “இந்த உலகத்துல ஒன்னவிட இன்னொன்னு பெட்டராதான் இருக்கும், அதுக்கு ஒரு முடிவே இல்ல. அதுக்காக நம்ம மனச மாத்திட்டே இருக்கக் கூடாது” என்று ஜானி திரைப்படத்துல ரஜினி பேசும் வசனம், எல்லாருக்கும், எல்லா இடத்துக்கும் பொருந்தும். காதலிலும் அப்படித்தான். ஒருவன் ஒரு பெண்ணை பார்க்கிறான். அவள்மீது ஆசைக் கொள்கிறான், அவளோடு பேசி பழக துடிக்கிறது அவன் நெஞ்சம். சிறிது காலம் அந்தப் பெண்ணை பின்தொடர்கிறான். அதை இதை ன்னு எதையாச்சும் செய்து அந்தப் பெண்ணின் மனதில் இடம்பிடிக்கும் அவன், கரம் பிடிக்கவும் நினைக்கிறான். இந்த வழிமுறைக்கு காதல் என பெயர் வைத்து, அந்தப் பெண்ணை பாசம் எண்ணும் கூண்டுக்குள் கட்டிப்போட்டுவிட்டு தானும் கூண்டுக்குள் அடைப்பட்டுக்கொள்கிறான். பாசம...