Posts

Showing posts from 2019

“எழுதுங்கள்... நிறைய எழுதுங்கள்...” - PS RAGAV

Image
“எழுதுங்கள்... நிறைய எழுதுங்கள்...”       என் குருநாதர் தினந்தோறும் என்னிடம் கூறும் சொல்... எழுது, எழுதினால் மட்டுமே எழுத்துப்பிழைகளை தவிர்க்க முடியும். அதுமட்டுமின்றி, எழுதினால் மட்டுமே மனதில் நீண்ட காலம் பதியும் என்பார். உண்மை தான், நாம் பள்ளிக் காலங்களில் எழுதுவதின் நோக்கத்தை ஆசிரியர்கள் நமக்கு வேறுவிதமாக உணர்த்தினார்கள். வீட்டுப்பாடம் எழுதிவா, வாய்ப்பாடு 5 முறை எழுதிவா என்றெல்லாம் நம்மை பழக்கியுள்ளார்கள். நம்மில் நிறைய பேருக்கு அதன் பயன் புரியாமல், ஆசிரியர்கள் மீது கோபம் கொண்டது தான் மிச்சம். இன்று அதன் பலனை உணரும்போது வாழ்நாளில் நிறைய நாட்களையும், விலைமதிக்க முடியாத நேரங்களையும் வீணடித்துவிட்டேன் என்றே தோன்றுகிறது.      எழுதுங்கள் என்றதும் என்ன எழுத வேண்டும்? பார்த்து எழுதணுமா? பாக்காம எழுதணுமா? என்கிற மாதிரியான கேள்விகள் எழலாம். அதற்கான பதில்கள் பல உள்ளன. பள்ளி மாணவர் வீட்டுப்பாடம் என்ற பெயரில் எழுதுவதும், கல்லூரி மாணவர் அசைன்மெண்ட் என்ற பெயரில் எழுதுவதும் ஒருவகையான எழுத்துத் திறன் தான். அதிலும் மேற்கண்டவை யாவும் யாரோ எழுதிய புத்தக்கத்தில் உள்ளத...