“எழுதுங்கள்... நிறைய எழுதுங்கள்...” - PS RAGAV
“எழுதுங்கள்... நிறைய எழுதுங்கள்...”
என் குருநாதர் தினந்தோறும் என்னிடம் கூறும் சொல்... எழுது, எழுதினால் மட்டுமே எழுத்துப்பிழைகளை தவிர்க்க முடியும். அதுமட்டுமின்றி, எழுதினால் மட்டுமே மனதில் நீண்ட காலம் பதியும் என்பார். உண்மை தான், நாம் பள்ளிக் காலங்களில் எழுதுவதின் நோக்கத்தை ஆசிரியர்கள் நமக்கு வேறுவிதமாக உணர்த்தினார்கள். வீட்டுப்பாடம் எழுதிவா, வாய்ப்பாடு 5 முறை எழுதிவா என்றெல்லாம் நம்மை பழக்கியுள்ளார்கள். நம்மில் நிறைய பேருக்கு அதன் பயன் புரியாமல், ஆசிரியர்கள் மீது கோபம் கொண்டது தான் மிச்சம். இன்று அதன் பலனை உணரும்போது வாழ்நாளில் நிறைய நாட்களையும், விலைமதிக்க முடியாத நேரங்களையும் வீணடித்துவிட்டேன் என்றே தோன்றுகிறது.
எழுதுங்கள் என்றதும் என்ன எழுத வேண்டும்? பார்த்து எழுதணுமா? பாக்காம எழுதணுமா? என்கிற மாதிரியான கேள்விகள் எழலாம். அதற்கான பதில்கள் பல உள்ளன. பள்ளி மாணவர் வீட்டுப்பாடம் என்ற பெயரில் எழுதுவதும், கல்லூரி மாணவர் அசைன்மெண்ட் என்ற பெயரில் எழுதுவதும் ஒருவகையான எழுத்துத் திறன் தான். அதிலும் மேற்கண்டவை யாவும் யாரோ எழுதிய புத்தக்கத்தில் உள்ளதை பார்த்து எழுதுகிறோம். சில நேரங்களில் இணையத்தில் உள்ள தகவல்களை கூட எழுதுகிறோம். அதே புத்தகத்தில் உள்ளதை படித்துவிட்டு பார்க்காமல் எழுதினால் படிப்பாளி, என்கிறோம். ஆனால் ஒரு போதும் அறிவாளி என்று கூறுவதில்லை. அப்படி கூறுவதும் தவறு என்பதே உண்மை. சுயமாக சிந்தித்து, தனக்கு தோன்றுவதை எழுதுபவர்களையே அறிவாளி எனலாம். அது உண்மையா அல்ல பொய்யா என்பதை பிறகு ஆராயலாம்.
எழுத்து நம் வாழ்க்கையில் பயன்படுத்தும் ஆயுதங்களில் மிக சக்திவாய்ந்த ஆயுதமாகும். நம் நினைவில் நின்றவை, கற்பனையாக தோன்றுபவை என அனைத்தையும் பதிவு செய்ய கருவியாக உள்ளது எழுத்து. எழுதுவதன் மூலம் மறந்து போன யாவும் மீண்டும் நினைவுக்கு கொண்டுவரும் என்பதில் ஐயம் ஏதுமில்லை. எழுதுவதன் மூலம் நமக்கு பல யோசனைகள் வரும், அந்த யோசனைகளே மீண்டும் எழுத்து வடிவம் பெற்று கதையாகவோ ,கவிதையாகவோ உருவெடுக்கும். எழுதுவது மனவுளச்சலை ஏற்படுத்தாது. அதனால் தான் சிலர் தினசரி இரவு தூங்க செல்வதற்கு முன் டைரி எழுதும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர்.
அறிவாளிகள் மட்டுமே சிறப்பாக எழுதுவார்கள் என்ற எண்ணம் நம்மில் இருக்குமேயானால் நிச்சயம் நம்மால் முகநூலில் கூட எதுவும் எழுத முடியாது. அப்படி என்றால் முகநூலில் எழுதுபவர்கள் அனைவரும் அறிவாளிகளா? என்ற எண்ணமும் வந்துவிடக் கூடாது. உலகில் உள்ள எழுத்தாளர்கள் யாவரும் அறிவாற்றலின் காரணமாக எழுத தொடங்கியவர்கள் அல்ல. யாரோ எழுதிய நூல்களை படித்துவிட்டு தங்கள் கற்பனைக்கு எட்டுகிற வகையில் தானும் எதாவது எழுதுவோம் என்று எழுத தொடங்கியவர்கள். பின் எது தோன்றுகிறதோ அதனை எழுத தொடங்கி, அதிலிருந்து பிழைகளைத் திருத்திக் கொண்டு, தங்கள் வாழ்வில் நிகழ்ந்தவற்றையும் சில கற்பனையோடு எழுத, அது அவர்களுக்கு வேறுவிதமான உலகத்திற்கு கொண்டு செல்கிறது. எழுத்தின் மீது கொள்ளும் காதலின்பால் முழுநேர எழுத்தாளர்களாக மாறிவிடுகிறார்கள். இது மேலும் அவர்களை நிறைய எழுத தூண்டும். அதற்காக பலவற்றை கற்க வேண்டிய சூழல் ஏற்பட, அதனையே வாழ்க்கையின் தேடலாக கொண்டு பயணிக்க தொடங்கிய எழுத்தாளர்களே அதிகம்.
கதை, கவிதை, கட்டுரை என எழுதுவதற்கு நிறைய முறைகள் உண்டு. எப்படி இருந்தாலும் எழுத்துக்கு தான் மதிப்பு உண்டு. நாம் சொல்ல வருவதை கதையாக சொன்னாலும், கவிதையாக சொன்னாலும், கட்டுரையாக சொன்னாலும் பொருள் என்னவோ ஒன்று தான். பிறருக்கு தான் கூற நினைக்கும் தகவலை பொருள்மாறாது கூறவேண்டுமே தவிர முறை மாறாமல் கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை. யாவரும் எழுத தகுதியானவர்கள் என்பதை உணர வேண்டும். முகநூலில் பதிவிடும் இரண்டு வரி கருத்தோ, செய்தியோ கூட ஒரு நல்ல எழுத்தாளனை உருவாக்கும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. நமக்கு தெரிந்த ஒன்றை முகநூலில் பதிவிடுகிறோம், அதை செய்தியாக பார்ப்பார்கள். அதனுடன் நம்முடைய எழுத்து திறனையும் கவனிப்பார்கள். சினிமா பார்த்துவிட்டு விமர்சனங்களை எழுதி பதிவிடுவோம், அதுகூட ஒரு வகையான எழுதும் திறன் தான். இப்படி நாம் சமூக வலைதளங்களில் பதிவிடும் கருத்துகளும் நம் எழுத்து திறனை காட்டுகிறது.
சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகள் அதற்கு வரும் எதிர்கருத்துகள் என அனைவரிடமும் எழுதும் திறன் தற்போது மேம்பட்டுள்ளது. எத்தனையோ பேர், சுயமாக எழுதும் கதைகளை, கட்டுரைகளை இணையத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சிலர் தங்களின் அறிவுக்கு எட்டியவற்றை எழுதுகிறார்கள், சிலர் தங்கள் அறிவுக்கு எட்டாத, அறிவுக்கு அப்பாற்பட்டவற்றையும் கூட எழுதுவார்கள். இங்கு எழுதுவதற்கு விதிகள் ஏதும் கிடையாது. அலங்காரச் சொற்கள் இல்லாமல் கூட எழுத இயலும் என்பதையும் அனைவரும் உணர வேண்டும். பரீட்சையில் தெரியாத வினாவுக்கு எழுதும் பதில் கூட ஒரு வகையான எழுதும் திறன் தான். இப்படி எழுதும் எழுத்துகளும், அதில் சொல்ல வரும் கருத்துகளும் தெளிவாக, பிழையில்லாமல் இருக்க வேண்டுமானால் நிச்சம் எழுத பழக வேண்டும். எழுதுங்கள், நிறைய எழுதுங்கள், என்ன தோன்றுகிறதோ எழுதுங்கள். எழுதுவது உங்களை மாற்றும், எழுத்து உங்கள் சமூகத்தை மாற்றும்.

ப சு இராகவேந்திரன்
புதிய தலைமுறை
(ஏதேனும் பிழை இருப்பின், தெரிவிக்கவும் )

Comments
Post a Comment