அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதித்த பேஸ்புக் நிறுவனம்..!
அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதித்த பேஸ்புக் நிறுவனம்..! அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் மக்களின் கவனத்தையும் நம்பிக்கையும் ஈர்ப்பதற்காகச் சமுக வலைத்தளத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய சமுக வலைத்தளமான பேஸ்புக், அரசியல் விளம்பரங்களுக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இதன்மூலம் தவறான தகவல்கள் பரப்படுவதும், அதனால் ஏற்படும் சிக்கல்களையும் தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் பேஸ்புக், ட்விட்டர். இன்ஸ்டாகிராம் போன்ற சமுக வலைத்தளங்களையே அனைவரும் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் செய்யப்படும் விளம்பரங்கள், வணிக ரீதியிலான விளம்பரதாரர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாகவும், ஆதாயம் தருவதாகவும் உள்ளது. ஆரம்ப காலம் தொட்டே இணையத்தில் பொருள்களை விற்க மட்டுமே விளம்பரங்கள் செய்து வந்த நிலையில், அரசியல் விளம்பரங்களும் அதீத வரவேற்பு பெற்றது. இதன்மூலம் ஆட்சியையும் பிடிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும்...