எல்லைமீறும் யூடியூப் சேனல்கள் - psragav
எல்லைமீறும் யூடியூப் சேனல்கள்...
(அவங்களுக்குதான் எல்லையே இல்லையே) 😂
நான் நேரடியா கேட்க விரும்பல, சுத்திவளைத்து கேக்குறேன். யூடியூப் சேனல் நடத்துறியா? இல்ல அஜால் குஜால் சேனல் நடத்துறீயா?
உண்மையாவே டிஜிட்டல் தளம் ரொம்பவே அற்புதமானது. பலரை நல்ல முறையில் வளர வைத்திருக்கிறது. இந்த டிஜிட்டல் மீடியத்தை பயன்படுத்தி எத்தனையோ நபர்கள் சின்னத்திரை, வெள்ளித்திரை என்று வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். சினிமா படம் எடுக்கும் அளவுக்கும் சில யூடியூப் சேனல்வாசிகள் உருவாகியுள்ளார்கள். இவர்களெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் சில சேனல்கள் மட்டும், போகிற போக்கில் போயிட்டே இருப்போம்; எவன் கேப்பான் நம்பள? என்று நினைத்துக் கொண்டு கொஞ்சம் கூட சமூக அக்கறை, வெட்கம் போன்றவை இல்லாமல், ஃபேமஸ் ஆக வேண்டும் என்பதையே நோக்கமாக வைத்துக் கொண்டு வலம் வருகின்றன.
மக்கள் அதிகமா நடமாடுற எடம், இளைஞர்கள் அதிகம் உள்ள பொது இடங்கள் போன்ற இடங்களை தேர்வு செய்துக் கொண்டு அவர்களிடம், பிட்டுப்படம் பாப்பிங்களா? நீங்க வெர்ஜினா? முதல்முறை யாரை கிஸ் பண்ணிங்க? அது இதுன்னு ஆபாச கேள்விகள் (இல்ல இல்ல ஆசைக்கேள்விகள்ன்னு வச்சிப்போம்) கேட்பதுமா ஒரு குரூப் திரியுது. நீங்க இதுபோன்ற வீடியோவ பார்த்திருந்த உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.
சரி, இந்த மாதிரி கேள்விகள கேக்குறதால உனக்கு என்ன நோகுதுன்னு என்ன கேக்குறீங்க, அதானா?
அமா, எனக்கு நோகுதுதான். டிஜிட்டல் தளத்துல எவ்வளவு பெரிய வாய்ப்பு இருக்கு, அதை ஏன் இவங்க இப்படி பயன்படுத்துறாங்கன்னு நினைகயில எனக்கு நோகுது. அவன் கிஸ் பண்ணா என்ன? பண்ணாட்டி என்ன? அவன் வெர்ஜின்னா இருந்தா என்ன? இல்லாட்டி என்ன? கேள்வி கேக்குற உனக்கு அதுல என்ன பயன்? கேள்வி கேக்குற நீதான் மக்குன்னு பாத்தா, வீடியோல நம்ம மூஞ்சி வந்தாலே போதும்ன்னு சில மகா மக்கு கூட்டம் இருக்குற வரைக்கும் உனக்கு பதில் வந்துட்டுதான் இருக்கும்.
அதுசரி, இந்த வீடியோக்களையும் ரசிக்க ஒரு கூட்டம் இருக்கும் போது என்னத்த சொல்லி, என்னத்த பண்ண? எப்பா, நான் ஒன்னும் பாடம் நடத்தல. இப்படிதான் கேள்வி கேக்கணும், இப்படி கேக்குறது கேவலம்ன்னு சொல்றதலாம் வச்சி என்ன போராளின்னு முத்திரை குத்திட வேண்டாம். கண்ட கருமத்தையெல்லாம் தாண்டி போக வேண்டியதா இருக்கேங்குற ஆதங்கம்தான். இதுல மோசம் என்னன்னு பாத்தா, இந்த மாதிரி வீடியோக்களில் கேள்விகளை கேட்கும் ஆங்கர்களில் பெரும்பாலும் பெண்களே!
ஏன்? ஆண்கள் மட்டும்தான் இப்படி கேக்கணுமா? எங்களுக்கு உரிமை இல்லையா? சம உரிமை, புரட்சிப் பெண் அது இதுன்னு பெண்ணியம் பேசிட்டு இந்த பக்கம் வராதிங்க. கண்டிப்பா இது உங்களுக்கான பதிவு இல்ல. (உங்கள இல்ல தோழி, இந்த பெண்ணியம் என்ற பேரில் சுற்றித்திரியும் சில டோலிகளை சொன்னேன்) ஆணோ பெண்ணோ, யாரா இருந்தாலும் கேவலம், அசிங்கம், வெட்கம்ன்னு எல்லாவற்றுக்கும் ஒரே அர்த்தம்தான்.
அடப்போப்பா, கேட்க எவ்வளவோ கேள்விகள் இருக்கு, இருந்தாலும் இந்த மாதிரி கேட்டாதானே நல்ல வீவ்ஸ் வருது, சீக்கிரம் ஃபேமஸ் ஆக முடியும்.
நான் ஒன்னும் ஃபேமஸ்க்காக இப்படிலாம் பண்ணல. மனதில் பட்டதை கேட்கிறேன். இதில் வெட்கப்பட என்ன இருக்கு? உனக்கு பிடித்தா வீடியோ பாரு இல்லன மூடிட்டு போ! என்று சொல்பவர்களுக்கு: பொதுவெளியில் பகிரப்படும் எல்லாமும் விமர்சனங்களுக்கு உட்பட்டது. அதேபோல் பிறரை எரிச்சலூட்டும் வகையில் அமைவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. வெள்ளித்திரையில் கூட ஆபாச, வன்முறை காட்சிகள் இடம்பெற்றால் தணிக்கை குழு ’ஏ’ சான்றிதழ் வழங்குகிறது. மிகவும் ஆபாசமாகவோ, வன்முறை நிறைந்ததாகவே இருந்தால் அந்த குறிபிட்ட காட்சிகளை நீக்கம் செய்தே சான்றளிக்கப்படுகிறது. ஆனால் இந்த டிஜிட்டல் தளத்துக்கு என்று தனியாக தணிக்கை குழு இல்லாததே இதுபோன்ற கருமங்களை கண்டும் காணாததுபோல செல்ல வேண்டியுள்ளது.
டிஜிட்டல் தளத்தில் பயணிப்போர் தங்களுக்கென சுய கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு செயல்பட்டால் பின்னாளில் டிஜிட்டல் மயமென்பது சிறப்பான கருவியாக இருக்கும் என்பதே இந்த டிஜிட்டல்வாசியின் எதிர்ப்பார்ப்பு.
(சில குறிப்பிட்ட யூடியூப் சேனல்களில் வரும் இதுசார்ந்த வீடியோக்களை பார்த்து ரசித்தவர்களை விட மனம்நொந்து, மன உளைச்சலுக்கு ஆளானோர்களின் மனநிலையை அடுத்த ஒரு பதிவில் எழுதுகிறேன்)
- ப சு இராகவேந்திரன்
புதிய தலைமுறை

Comments
Post a Comment