தலைவி பட சர்ச்சை - பதில் சொல்வாரா தலைவா இயக்குநர்?
தலைவா படத்திற்கு தலைவியால் சர்ச்சை. இப்போது தலைவி படத்திற்கு யாரால் சர்ச்சை? தலைவி படம் குறித்து பல விதமான சர்ச்சைகள் சூழ்ந்துள்ளன. இயக்குநர் ஏ.எல்.விஜய் ஜெயலலிதாவின் வரவாற்றை திரிக்கிறார், புனைவு என்ற பெயரில் எம்.ஜி.ஆர்.-ஐ அவமதித்துள்ளார், நடக்காத நிகழ்வுகளை நடந்ததுப்போல சித்தரித்துள்ளார், ஆர்.எம்.வீரப்பனை முழுவதுமாக ஜெயாவுக்கு வில்லனாக காண்பித்து உண்மைக்கு புறம்பாக படத்தை எடுத்துள்ளார் என்று பல விதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட்டு கொடுத்த பேட்டியில் கூறும்போது, எம்ஜிஆர் என்றைக்குமே பதவிக்கு ஆசைப்பட்டவர் கிடையாது. 1967-ல் தேர்தல் பிரச்சாரத்தில் குண்டடிப்பட்ட எம்ஜிஆரின் போஸ்டர்கள் பட்டிதொட்டியெங்கும் ஒட்டப்பட்டு திமுக மிகப்பெரிய வெற்றியைப்பெற எம்ஜிஆர் காரணமாக இருந்தார். அப்போது அண்ணா அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க முன்வந்தபோது எம்ஜிஆர் மறுத்து நான் நடிகராகவே இருக்கிறேன் என்று ஒதுங்கிக் கொண்டார். அவரை மரியாதை செய்யும் விதமாக சிறுசேமிப்புத் திட்ட தலைவர் பதவியை உருவாக்கி அண்ணாவே கொடுத்தார். எம்ஜிஆர் கேட்கவில்லை, அண்ணாவே கொ...