ஓடிடியில் ஆங்கராகும் மீம்ஸ் நாயகன் வைகைப்புயல் வடிவேலு
மீம்ஸ் நாயகன், மீம் க்ரியேட்டர்களின் கடவுள், வைகைப்புயல் வடிவேலுவ திரையில கடைசியா மெர்சல் படத்துல பாத்தது. அதன்பிறகு இப்போவரைக்கும் மீம்ஸ் வழியாகதான் அவர் பார்க்க முடியுது. இப்போ வடிவேலு, ஓடிடி தளத்துல அடியெடுத்து வைக்கப்போறதா ஒரு தகவல் கிடைத்திருக்கு. இந்த தகவல் மட்டும் உறுதியான நிச்சயமா வடிவேலு ஃபேன்ஸ்-க்கு செம ட்ரீட்டு இருக்கு. அப்படி என்ன பண்ணப்போறாரு, என்ன வாய்ப்பு-ன்னு விரிவா பார்க்கலாம் வாங்க!
நம்ம அன்றாட வாழ்க்கையில எதாவது ஒரு தருணத்துல வடிவேலு காமெடியோ, அவரின் காமெடி டயலாக்கையோ பயன்படுத்தாம இருந்ததே இல்ல. அப்படிப்பட்ட ஒரு இடத்த மக்கள் மத்தியில தன்னோட நகைச்சுவை மூலமும், நடிப்பின் மூலமும் பெற்றுயிருக்காரு.
மெர்சல் படத்துக்கு அப்பறம் பெரிய அளவுல படவாய்ப்பு இல்லாமல் இருந்தாலும், வந்த சில வாய்ப்புகளையும் நிராகரித்த வந்த வடிவேலு, இப்போ நாய் சேகர் என்ற படத்துல நடிச்சிட்டு வர்றாரு. ஒரு காலத்துல வடிவேலு காமெடிகளுக்காகவே சில படங்கள் ஓடியிருக்கு. அந்த அளவுக்கு திறமையான நடிகர் வடிவேலு. ஆனால், இடையில சில காலம் அரசியல் ஆசை வந்த வடிவேலு, 2011 சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுகவுக்கு ஆதரவாக களத்துல இறங்கி திமுகவின் பிரசார பீரங்கியா மாறினாரு. அந்த நேரத்துல தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எதிராகவும், அதிமுக கூட்டணிக்கு எதிராகவும் மிக கடுமையா பிரசாரம் பண்ணினாரு.
ஆனால் அதுவே அவர் சினிமா வாழ்க்கைக்கு ஒரு கரும்புள்ளியா மாறிடிச்சு. அந்த தேர்தல்ல அதிமுக தேமுதிக கூட்டணி அமோக வெற்றி பெற, திமுக காங்கிரஸ் கூட்டணி படுதோல்விய சந்திச்சாங்க. இதுனால வடிவேலுவுக்கு சினிமாதுறையில கடும் நெருக்கடிய சந்திக்க வேண்டியதா இருந்துச்சு. அதிலிருந்து இப்போவரைக்கும் எழமுடியாத நடிகரா இருக்காரு வடிவேலு. இதுமட்டுமில்லாம, பிரமாண்ட இயக்குநர் ஷங்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமா சினிமாவுல இருந்தே வடிவேலுவ ஓரங்கட்ட நிறைய பேரு வேலை செஞ்சாங்க. அதனால வடிவேலுவுக்கு ரெட் கார்ட் தரப்பட்டு, 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் ரெட் கார்ட்-ல இருந்து விடுதலை கிடைத்து, இப்போ மீண்டும் பல பட வாய்ப்புகள் வர தொடங்கியிருக்கு. இருந்தாலும் இன்னமும் மீம் க்ரியேட்டர்களுக்கு டெம்ளேட்டா இருந்து சமூக வலைதளம் மூலம் எல்லாருடைய மனங்களிலும் இருந்துட்டுதான் வராரு.
மீம்ஸ்-க்குள்ளையே ட்ராவல் பண்ணிட்டு வந்த வடிவேலு தற்போது ஓடிடி தளத்துல ஒரு டாக் ஷோவ ஹோஸ்ட் பண்ண போறதா ஒரு தகவல் வந்திருக்கு. சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்று பேசப்போற இந்த ஷோவுக்கு ஆங்கரா வடிவேலுவ முடிவு பண்ணியிருக்காங்கலாம். இன்னும் அதிகாரப்பூர்வமா கையெழுத்து ஆகல, ஆனா வடிவேலுதான் இந்த ஷோவ ஹோஸ்ட் பண்ணப்போறாருன்னு தகவல் வெளியாகியிருக்கு.
இதற்கு இடையில இன்று ஒரு போஸ்டர் சமூக வலைதளங்கள்ல பார்க்க முடிஞ்சிது. சி.வி.குமார் தயாரிப்பில் வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் டிடெக்டிவ் நேசமணி என்ற போஸ்டர்தான் அது. ஆனா, அதற்கு சி.வி.குமார் ப்ரொடக்ஷன்ஸ் தரப்பில் இருந்து மறுப்பு வந்திருக்கு. “Fake news uhh இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாப்பா? ஆனா தலைவர் டிசைன்ல சூப்பரப்பா..” அப்படின்னு ட்விட் வெளியானது. fan made போஸ்டர இருந்தாலும் நம்பும்படியா இருக்குப்பா!
சரி, வடிவேலுவின் ஓடிடி வருகை அவருக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுக்குமா?, காமெடியின் தலைவன் மீண்டும் களத்துல இறங்கினா கலக்குவாரா? உங்க கருத்துகள கமெண்ட்ல தெரிவியுங்க!
- ப.சு.ராகவேந்திரன்,
OH Tamil Digital Media





Comments
Post a Comment