டாக்டர் - ஒரே நாளில் ரூ.8.50 கோடி வசூல்! வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழு
சினிமா உலகை பொறுத்தவரையில் நடிகர்கள் எப்போதும் தங்களது படங்களின் மூலம் மோதிக் கொள்வது வழக்கம். ரியல் லைஃப்ல நல்ல நண்பர்களாக இருந்தாலும் படம்ன்னு வந்துட்டா யார் மாஸ்ன்னு அவங்க நினைக்கிறாங்களோ இல்லையோ, அவர்களின் ரசிகர்கள் ஒரு பிரச்சனையை விட்றுவாங்க. இதுதான் காலங்காலமா தமிழ் சினிமாவுல நடந்துட்டு வருது.
ரஜினி கமல், விஜய் அஜித் ஆகியோர்களை தொடர்ந்து அடுத்ததாக வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் கூட ஏதோ ஒரு காரணத்தால பெரிய நடிகர்களுடன் மோதுகின்றன. இதனால் சினிமா உலகில் வசூல் வேட்டை பாதிக்கப் படுவதாகவும் சொல்லப்படுது. இதை உணர்ந்து கொண்ட ஒரு சில டாப் நடிகர்கள் முக்கியமான நாட்களில் சொலோவாக வெளிவந்து வசூல் வேட்டை நடத்துவதால் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் நல்ல லாபத்தை ஈட்றாங்க. அப்படி போட்டியே இல்லாம ரிலிஸ் ஆகி வெற்றிகரமா ஓடிக்கொண்டிருக்கும் “டாகடர்” படத்தை பற்றிதான் இந்த வீடியோவுல பாக்கப்போற்றோம்.
இந்த திரைப்படத்தை நெல்சன் திலிப்குமார் காமெடி கலந்த திரைப்படமாக எடுத்திருக்கிறாரு. இந்த படத்திற்கு தற்போது மக்கள் கூட்டம் அலை அலையாக அதிகரிச்சிட்டே போவதாக தெரிகிறது. இதன் மூலம் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியில இருக்காங்க.
சமீபகாலமாக கொரோனா நம்மை விடாமல் துரத்தியது போல பல சினிமா கம்பெனிகளையும் விட்டுவைக்காமல் ஆட்டம் காட்டியது. தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் சினிமா துறை தற்போது திரையரங்கிற்கு 50% மட்டுமே இருக்கைகள் கொடுத்து இருந்த நிலையிலும் டாக்டர் படத்திற்கு கூட்டம் அலை மோதுது. அந்த வகையில் டாக்டர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே 8.50 கோடி கலெக்ஷன் ஆகியிருக்கிறதா தகவல் கிடைச்சிருக்கு.
இதற்கு முன்பு வெளிவந்த பெரிய நடிகர்களின் திரைப்படங்களின் வசூலை ஒப்பிடும்போது டாக்டர் படத்துக்கான வசூல் அதிகமாகவே உள்ளதாம். தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் முதல் நாளில் மட்டும் 26 கோடி வசூல் செய்தது. தனுஷின் கர்ணன் 10.46 கோடி, தற்போது மூன்றாவது இடத்தில் டாக்டர் 8.50 கோடி, சுல்தான் 4.90 கோடி.
ஒருவேளை அரசு 100% இருக்கைகளுக்கும் அனுமதி வழங்கியிருந்தால் டாக்டர் படம் சுமார் 16 கோடி அளவில் வசூல் செய்திருக்கலாம் என்றே கணிக்கப்படுது. அப்படி நடந்திருந்தால் தனுஷின் கர்ணன் படத்தின் முதல்நாள் வசூலைவிட டாக்டர் வசூல் மிஞ்சியிருக்கும் என்பதையும் பார்க்க வேண்டும். இந்தப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்பதிலும் எந்த மாற்று கருத்தும் இல்லை.
- ப.சு.இராகவேந்திரன்
OH Tamil




Comments
Post a Comment